×

பஹ்ரைனில் சிறை வைக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் நபீல் ரஜாப் விடுதலை

மனாமா: வளைகுடா நாடான பஹ்ரைனில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மனித உரிமை ஆர்வலர் நபீல் ரஜாப் (வயது 55) சிறைவாசம் அனுபவித்து வந்தார். இவர் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த குற்றச்சாட்டில்  நபீல் ரஜாப்க்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மனித உரிமை குழுக்கள், நபீல் ரஜாப் நடத்தப்படும் விதத்துக்கு கண்டனம் தெரிவித்தன.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா. குழு அழைப்பு விடுத்தது. இந்த நிலையில் மனித உரிமை ஆர்வலர் நபீல் ரஜாப் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் எஞ்சிய தண்டனை காலத்தை காவலில் வைக்காத அமைப்பில் கழிப்பார் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனில் 2018-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் தண்டிக்கப்பட்ட கைதிகளின் தண்டனைக்காலத்தை காவல் அற்ற அமைப்பில் கழிக்க வகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தின் கீழ் முதன்முதலில் விடுதலை செய்யப்பட்டுள்ள பிரபலம் நபீல் ரஜாப்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அங்கு 2011-ல் நடந்த ஜனநாயக சார்பு எழுச்சி போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Nabeel Rajab ,Bahrain ,jail , Bahrain, jail and human rights activist Nabeel Rajab, released
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...