×

ஓசூர் அருகே 3 பேரை பலி கொண்ட யானை சிக்கியது.: வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3 பேரை பலி வாங்கிய ஒற்றை காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளார். தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு மாதத்திற்கு மேலாக ஒற்றை காட்டு யானை சுற்றித்திருந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

கடந்த இரண்டு வாரங்களில் மூன்று இடங்களில் அடுத்து அடுத்து மூன்று விவசாயிகளை அந்த காட்டுயானை தாக்கி கொன்றது. இதனால் பீதியில் உறைந்த மக்கள் உயிர்கொல்லி யானையை உடனடியாக பிடிக்கவேண்டும் என்று வனத்துறையினரிடம் கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர். அதிகாலை 5.30 மணி அளவில் ஒற்றை காட்டு யானையை கண்டுபிடித்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்ட அந்த யானை சிறிது நேரத்தில் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து அந்த யானை கயிறுகள் மூலம் கட்டி வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றப்பட்டது. 3 பேரை கொன்ற ஒற்றை கட்டியானை பிடிப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அந்த யானையை சந்தியமங்கலம் அடர் வனப்பகுதியில் கொண்டு விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


Tags : Hosur Elephant ,department ,Forest , Elephant ,3 dead ,Hosur,Forest ,injection
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...