×

பொருட்களை எடுத்து சென்ற வியாபாரிகள் நெல்லை டவுன் மார்க்கெட் இடிப்பு பணிகள் துவக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை: நெல்லை டவுன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடிக்கும் பணி அதிகாரிகள் முன்னிலையில் நேற்று துவங்கியது. இதையடுத்து வியாபாரிகள் தங்களது பொருட்களை மார்க்கெட்டில் இருந்து நேற்று எடுத்து சென்றனர். நெல்லை டவுன் சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட்டில் மொத்தம் 86 கடைகள் இயங்கி வந்தன. சுமார் 200 கடைகள் தரைதளம் அடிப்படையில் இயங்கி வந்தன. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அங்கு நவீன மார்க்கெட் அமைப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கடைகளை மாநகராட்சி காலி செய்தது. வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் அளவைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து டவுன் பொருட்காட்சி மைதானத்தில் கடைகளை நடத்தினர்.

அடுத்த வாரத்தில் நெல்லை டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட்டில் கட்டுமானங்கள் தொடங்க உள்ள நிலையில், நேற்று அங்குள்ள கடைகளை இடிக்கும் பணிகளை மாநகராட்சி துவங்கியது. முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு கடைகளுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாரிகள் முன்னிலையில் கடைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கும் பணிகள் துவங்கின. முதற்கட்டமாக அங்குள்ள மாநகராட்சி கழிப்பறை இடிக்கப்பட்டது. இதையடுத்து சில வியாபாரிகள் தாமாகவே முன்வந்து கடையிலுள்ள பொருட்களை எடுத்துச் சென்றனர். மார்க்கெட் நுழைவாயிலில் ஒரு வாட்ச்மேன் போடப்பட்டு, வியாபாரிகள் தங்கள் மேஜை, சேர், குடம் உள்ளிட்ட தளவாட சாமான்களை எடுத்து செல்ல வழிவகை செய்யப்பட்டது. நேற்று மார்க்கெட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. வியாபாரிகள் பொருட்களை எடுத்துச்சென்றவுடன், கடைகளை முழுமையாக இடிக்கும் பணி துவங்கும் என அதிகாரிகள்
தெரிவித்தனர்.



Tags : Launch , Launch , Paddy Town Market,Demolition Works
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!