×

மும்பையில் இருந்து 700 புலம்பெயர் தொழிலாளர்களை தனி விமானங்களில் உபி அனுப்பிய அமிதாப் பச்சன்

மும்பை: புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த  ஊருக்கு அனுப்பி வைக்க தனி விமானங்களை ஏற்பாடு செய்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளார். மும்பையில் தவித்து வந்த 700 புலம்பெயர் தொழிலாளர்களை உத்தரப் பிரதேசம் அனுப்பி வைக்க 4 தனி விமானங்களை  அமிதாப் பச்சன்  ஏற்பாடு செய்துள்ளார். 700 புலம்பெயர் தொழிலாளர்களும் 4 விமானங்கள் மூலம் உ.பி.யின் லக்னோ, கோரக்பூர், வாரணாசி, அலகாபாத் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 விமானங்கள் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றன. இன்று அதிகாலை ஒரு விமானம் புறப்பட்டது.
இந்த விமானங்களில் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் உன்னாவ், கோண்டா, லக்னோ உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்று சேர்ந்தனர்.

மும்பையில் சிக்கித் தவித்த 700 புலம்பெயர் தொழிலாளர்களை முதலில் ரயிலில் அனுப்பி வைக்கவே அமிதாப் பச்சன் முடிவு செய்ததாகவும் ஆனால், சூழல் சரியாக இல்லை என்பதால், அனைவரையும் இண்டிகோ விமானம் மூலம் அனுப்பி வைக்க முடிவு செய்ததாகவும் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக  மும்பையிலிருந்து அமிதாப் பச்சன் சார்பில் ராஜேஷ் யாதவ், 300 புலம்பெயர் தொழிலாளர்களை 10 பேருந்து மூலம் லக்னோ, அலகாபாத், பாதோதி போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அலகாபாத் விமான நிலையத்தில் இறங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துச் சென்றனர்.


Tags : migrant workers ,Amitabh Bachchan ,flights ,Mumbai , Mumbai, 700 Migrant Workers, Separate Planes, UP, Amitabh Bachchan
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...