×

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் மரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோடு எல்.ஓ.சி நடத்திய ஷெல் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பூஞ்ச் மாவட்டங்களில் இயங்கும் தர்குண்டி துறையில் பாகிஸ்தான் துருப்புக்கள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் புதன்கிழமை இரவு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். எதிரிகளின் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீர மரணம் அடைந்த வீரர் ராஜதானி கிராமத்தைச் சேர்ந்த நயம்துல்லா (35) என்று ரஜோரி மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு சந்தன் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. புட்காமின் பதன்போரா கிராமத்தில் இரண்டு மூன்று தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை முதல் காஷ்மீரில் இது நான்காவது தாக்குதல் ஆகும். தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் நடந்த முந்தைய மூன்று மோதல்களில் 14 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்

Tags : soldier ,Indian ,Pakistani Army ,attack ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, Pakistani army, attack, Indian soldier, death
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்