×

ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்தப்படும்: பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டம்

புதுடெல்லி: ரசிகர்கள் இன்றி ஐபிஎல் போட்டியை நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாத அளவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் இருப்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று காரணமாக சர்வ தேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  தற்போது சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில் ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த முடியுமா? என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக கூறியிருக்கிறார்.ரசிகர்கள், அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் என அனைவரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை எதிர்பார்ப்பதாகவும் கங்குலி தெரிவித்தார். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என சமீபத்தில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். எனவே, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக பி.சி.சி.ஐ விரைவில் முடிவு செய்யும் இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.Tags : Ganguly ,match ,BCCI ,IPL ,fans , Fans, IPL match, BCCI president Ganguly
× RELATED இங்கிலாந்து - அயர்லாந்து இடையே முதல்...