×

மாணவர்களுக்கு இலவச சிஏ பயிற்சி

சென்னை: நவம்பர் மாதம் நடக்க உள்ள சிஏ பவுண்டேஷன்  தேர்வுக்கான இலவச வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகம் ஆகியவை இணைந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டயக் கணக்காயர்(சிஏ) பவுண்டேஷன் தேர்வுக்கான இலவச வகுப்புகளை நடத்த உள்ளனர். இந்த வகுப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கிவைத்தார்.
‘வெப்பினார்’ மூலம் நடக்கும் இந்த வகுப்புகள் நவம்பர் மாதம் நடக்க உள்ள சிஏ பவுன்டேஷன் தேர்வுக்கு உதவும்.

இந்த வகுப்புகள் ஜூன் 10ம் தேதி(நேற்று) தொடங்கி செப்டம்பர் 20ம் தேதி வரை நடக்கிறது. இந்த வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.icai.org  என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பயிற்சி பெறலாம். பதிவு செய்யும் போது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பள்ளியில் படித்த சான்று அல்லது பிளஸ் 2 ஹால்டிக்கெட் நகல்களை ஸ்கேன் செய்து sircclases@icai.in என்ற மின்னஞ்சலில் அனுப்பி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர், 8220522669/9176826789 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.


Tags : Free CA ,Training , Students
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி