×

காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிப்பு கடலோர பகுதியில் சூறாவளி காற்று வீசும்

சென்னை: கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக இன்று தொடங்கி 14ம் தேதி வரை கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும்.  சென்னையை பொறுத்தவரையில் பொதுவாக மேக மூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.


Tags : coastline , Hurricane-force winds ,coastal belt, extend coastline
× RELATED மீட்பு, நிவாரணம் மற்றும் மறு...