×

அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 5 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் வெயிலின் தாக்கத்தால், கடுமையாக தவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக, உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை, மதியம், இரவு என பல நேரங்களில் சுமார் ஒருமணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. இதனால் வெயிலின் அனலால் மக்கள் புழுங்கி வேதனை அடைகின்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி கடைகள், நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.

அங்கு குறைவான ஊழியர்களே வேலை செய்கின்றனர். அந்த நேரத்தில் திடீரென ஏற்படும் மின்தடையால், அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். பல அலுவலகங்கள் குறைந்த ஆட்களைக் கொண்டு இயங்கும் சூழலில் இந்த மின்வெட்டால் அலுவலக பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு, மின்வெட்டு ஏற்பாடமல் பாதுகாத்து கொள்ள உத்தரவிடுமாறு பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Unannounced, Lightning, Public Awakening
× RELATED வெயில், மழையில் கட்சி பணியாற்றிய...