×

காஞ்சி தெற்கு திமுக சார்பில் ஜெ.அன்பழகன் படத்துக்கு அஞ்சலி

காஞ்சிபுரம்: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் - சேப்பாக்கம் எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் மறைவையொட்டி, திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்பி செல்வம், திமுக மாணவரணி செயலாளர் மற்றும் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் மறைந்த ஜெ. அன்பழகன் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், நகர அவைத்தலைவர் எஸ்.சந்துரு, ஒன்றிய செயலாளர்கள் சேகர், டி.குமார், தொண்டரணி சுகுமாரன், நகர பொருளாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஜெகநாதன், பிரகாஷ், இளைஞரணி கமலக்கண்ணன் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : J Anbhagan ,Kanchi South DMK Kanchi South DMK , Tribute ,J Anbhagan, behalf, Kanchi South DMK
× RELATED ஏபிஜே-வின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்.!...