×

உயிரை விட கடமையே முக்கியம்: காவலர்களின் நெஞ்சுரத்திற்கு சல்யூட்

உலகையே தற்போது அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரசில் இருந்து, மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் மருத் துவர்கள், செவிலியர்கள் எவ்வாறு ஈடுபடுகிறார்களோ, அந்த அளவிற்கு போலீசாரும் பணியாற்றி வருகின்றனர். நம் நாட்டில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதியில் இருந்து இன்று வரையிலும் தூக்கமின்றி, கடமையே முக்கியம் என அரசின் கட்டுப்பாடுகளை மக்களிடம் எடுத்துரைத்து காவல் பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். பொதுமுடக்கத்தை முறையாகவும், அரசின் கட்டுப்பாடுகளை சரியாகவும் பின்பற்றினால்தான், கொரோனா பரவலை தடுக்க இயலும் என கூறியதும் முதலில் அதனை சரியாக பின்பற்றியது காவல்துறைதான். மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகளுக்கு சீல் வைத்தும், ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்தும் தங்கள் கடமையை ஆற்றினர். இதுபோக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சிக்னல்களில் நடனமாடியும், பாட்டு பாடியும் கொரோனாவின் ஆபத்தை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே சாலை யில் விழிப்புணர்வு ஓவியங்களையும் வரைந்தனர். இதிலும் ஒருபடி மேலே சென்று, கொரோனா வைரஸ் கிருமியின் தோற்றத்தை கவசமாக முகத்தில் மாட்டிக்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பல இடங்களில் மக்களின் காலில் விழுந்தும், வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தி, நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தனர். கொரோனா பரவலை தடுத்ததில், பெரும் பங்கு தமிழக காவல்துறைக்கு இருக்கிறது. உயிரை துச்சமென கருதி, நெஞ்சுறுதியோடு இரவு, பகல் பாராமல் கடமையே முக்கியம் என பணியாற்றிய காவலர்களுக்கு எத்தனை சல்யூட் அடித்தாலும் தகும். அந்த உயிர் காக்கும் வீரர்களை போற்றுவோம்!. அவர்களுக்கு உறுதுணையாக இருந்து கொரோனாவை ஒழித்திடுவோம்!!.


Tags : guards , Duty , important,life,Salute,heart , guards
× RELATED மத்தியப்பிரதேசத்தில் ஹேண்ட் பிரேக்...