டெல்லி: டெல்லி மருத்துவமனைகளின் முன்பாக காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை அறிவிக்கும் எல்.இ.டி மின்விளக்கு பலகைகளை நிறுவ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படுக்கைகள் காலியாக உள்ளதை மறைத்து கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் எச்சரித்துள்ள நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.