×

உளுந்தூர்பேட்டை அருகே முதல்வர் காரை படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் சிறைபிடிப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே முதல்வர் காரை படம்பிடிக்கச் சென்ற செய்தியாளர்கள் 3 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து மாலையில் கார் மூலம் முதல்வர் சேலம் சென்றுகொண்டிருந்தார். திண்டிவனம் அருகே வந்த போது முதல்வர் கார் பழுதாகும் நிலை ஏற்பட்டதால் வேறு கார் வரவழைக்கப்பட்டது. சேலத்தில் இருந்து கார் வரும் வரை உளுந்தூர்பேட்டை ரவுண்டானா அருகே காத்திருந்தார் முதல்வர். மாற்று காரில் முதல்வர் ஏறிச்செல்வதை படம் எடுப்பதற்காக செய்தியாளர்கள் காத்திருந்தனர்.

முதல்வர் மாற்று காரில் செல்வதை செய்தியாளர்கள் படம் எடுக்க விடாமல் டிஎஸ்பி விஜிகுமார், போலீசார் தடுத்தனர். செய்தியாளர்கள் 3 போரையும் அருகில் உள்ள வீட்டில் ஒரு மணி நேரம் பூட்டி சிறைவைத்ததால் அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் சேலத்தில் இருந்து வந்த மாற்று காரில் ஏறிச் சென்ற பிறகே செய்தியாளர்களை விடுவித்தனர்.


Tags : Reporters ,CM ,Ulundurpet ,Chief Car , Ulundurpet, Chief Car, Reporters Capture
× RELATED வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு!