×

கொரோனா பரவல் தன்மை மாறிக்கொண்டே வருவதால் டிஸ்சார்ஜ் நெறிமுறைகளும் மாறிக்கொண்டே வருகிறது: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்க 1563 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை 10,000- ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். இறப்பு விகிதம், எண்ணிக்கை தொடர்பாக அரசு வெளிப்படையாக ஒவ்வொரு நாளும் தகவல்களை வெளியிட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; முதுநிலை மருத்துவ மாணவர்கள் 574 பேர் கொரோனா சிகிச்சைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்க 1,536 சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு 80 ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் தேவைக்கேற்ப சென்னைக்கு அதிக அளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அவர், கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் 5,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்தார். இதையடுத்து மேலும் 5,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக பிரத்தியேக படுக்கைகள் ஏற்பாடு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். கொரோனா பரவல் தன்மை மாறிக்கொண்டே வருவதால், டிஸ்சார்ஜ் நெறிமுறைகளும் மாறிக்கொண்டே வருகிறது எனக் கூறியுள்ளார்.

Tags : Beela Rajesh ,corona spread , Corona, Dispersal, Discharge, Health Secretary, Beela Rajesh
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...