×

சாத்தானின் வேலையை தோற்கடித்துவிட்டோம் !.. கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று அடைந்ததாக தான்சானியா அதிபர் அறிவிப்பு

வெல்லிங்டன் :  நியூசிலாந்தை தொடர்ந்து தங்கள் நாடு கொரோனாவில் இருந்து விடுதலை பெற்று விட்டதாக தான்சானியா அதிபர் அதிபர் ஜான் மகுபூலி அறிவித்துள்ளார். உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து, வாடிகன், ஃபிஜி போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து வென்று விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அந்த வரிசையில், தான்சானியாவும் தற்போது இணைந்துள்ளது. ஏப்ரல் 29-க்கு பின்னர் கொரோனா தொடர்பான எந்த புள்ளி விபரத்தையும் தான்சானியா வெளியிட வில்லை. அன்றைய நாளின்படி அங்கு 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 29 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் அந்நாடு கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளதாக அதிபர் ஜான் மகுபூலி அறிவித்துள்ளார். சாத்தானின் வேலையை தான்சானியா தோற்கடித்து விட்டதாகவும் அதிபர் ஜான் மகுபூலி அ கூறியுள்ளார்.மேலும், பரிசோதனைக் கருவிகளின் தவறால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க நேர்ந்தது என்றும் அதிபர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chancellor ,Tanzanian ,Corona Torkatittuvittom ,President ,Corona , Satan, Job, Corona, Liberation, Tanzania, Chancellor, Announcement
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...