×

மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவில்லிபுத்தூர்:திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வனப்பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது செண்பகதோப்பு. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் அரியவகை சாம்பல் நிற அணில்கள் மற்றும் புலி, சிறுத்தை, யானைகள், காட்டெருமை, மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதி சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. சரணாலயப்பகுதி என்பதால் அடிக்கடி வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ரோந்து செல்வதால், வனப்பகுதியில் வேட்டை சம்பவங்கள் குறைந்துள்ளன. இதன் காரணமாக பல்வேறு வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதில் சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தொடர் கண்காணிப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடிக்கடி வனப்பதியில் ரோந்து சென்று வருவதால் இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது வனப்பகுதியில் ஆயிரக்கணக்கில் சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது’’ என்றார்.

Tags : Western Ghats , Increase, number, gray squirrels,Western Ghats
× RELATED நீலகிரி மாவட்டத்திற்கு வரும்...