×

நியூசிலாந்து ,ஃபிஜி, தான்சானியா... கொரோனாவை வென்ற உலகின் 9 நாடுகள்; குவியும் பாராட்டுக்கள்!!

வெல்லிங்டன் : நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன் உட்பட 9 நாடுகள் கொரோனா இல்லாத நாடுகளாக திகழ்கின்றன. உலகை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை மொத்தமாகப் புவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்தில்தான் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வப்போது இருக்கும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டு மருத்துவர்கள் நிர்ணயித்த மருந்துகள் மட்டுமே தற்போது வரை வழங்கப்பட்டுவருகிறது.

இத்தகைய  கொடூர காலத்தில் உலகின் 9 நாடுகள் கொரோனா இல்லாத நாடுகளாக மாறியுள்ளன.

நியூசிலாந்து

நியூசிலாந்தில் இப்போதைக்கு கொரோனா நோயாளிகள் இல்லை என்பதால் 7 வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நாட்டில் மொத்தம் 1,154 பேருக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 22 மட்டுமே. மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

தான்சானியா

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 29 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் அந்நாடு கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளதாக அதிபர் ஜான் மகுபூலி அறிவித்துள்ளார். சாத்தானின் வேலையை தான்சானியா தோற்கடித்து விட்டதாகவும் அதிபர் ஜான் மகுபூலி  கூறியுள்ளார்.

வாடிகன்

வாடிகனில் ஜூன் ஆறாம் தேதி நிலவரப்படி 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் குணமடைந்துள்ளனர்.

ஃபிஜி

தெற்கு பசிபிக் பெருங்கடல் தீவான ஃபிஜி, கொரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட்டுவிட்டாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு பிரதமா் ஃபிராங்க் பய்னிமராமா வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில், ‘நாட்டில் கடைசியாக கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு 45 நாள்களாகிவிட்டது. ஒரு பலி கூட இல்லாமல் அந்த நோயிலிருந்து நாங்கள் முழுமையாக விடுபட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல் மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் கொரோனா இல்லாதவையாக மாறியுள்ளன.

Tags : Tanzania ,New Zealand ,Fiji ,countries ,world ,Corona , New Zealand, Fiji, Tanzania, Corona, countries, congratulations
× RELATED பிஜி, வானாட்டு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்