×

திருவண்ணாமலை காந்தி நகரில் கொளுத்தும் வெயிலில் பூக்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வியாபாரிகள்: பூ மார்க்கெட்டை விரைந்து திறக்க கோரிக்கை

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை காந்தி நகரில் கொளுத்தும் வெயிலில் பூக்களை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், ஜோதி பூ மார்க்கெட்டை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திருவண்ணாமலை ஜோதி பூ மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு மேலாகியும் மார்க்கெட் திறக்கப்படாததால், திருவண்ணாமலையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த, பூக்களை பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்களது பூக்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. அதேபோல், பூக்களை வாங்கும் வியாபாரிகள் அதனை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக பூ வியாபாரிகள் தேரடி வீதியில் சாலையோரங்களில் பூக்களை வாங்கி, விற்பனை செய்து வந்தனர். அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர், காந்தி நகரில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் பூக்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தி கொள்ளுமாக கூறியதாக கூறப்படுகிறது. அதன்படி, நேற்று காந்தி நகரில் பூக்கள் விற்பனை நடைபெற்றது. அங்கு, கொளுத்திய வெயிலால் நிழலுள்ள இடங்களில் கூட்டமாக திரண்டு விற்பனை செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் அவதிக்குள்ளாகினர். எனவே, பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, போதிய இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது ஜோதி பூ மார்க்கெட்டை மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : city ,traders ,Thiruvannamalai Gandhi ,Merchants , Farmers, Merchants ,Can't Sell Flowers , City
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு