×

தேனி பைபாஸ் சாலையில் சாலை விரிவாக்கப் பணி முடக்கம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தேனி: தேனி நகர் பைபாஸ் சாலையில் முடங்கிக் கிடக்கும் சாலைப் பணியை தொடங்கி விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி புதிய பஸ்நிலையத்திலிருந்து பெரியகுளம் செல்லும் பைபாஸ் சாலை 4.4 கி.மீ தூரமுள்ளது. இதில் 2.8 கிமீ தூரம் வனத்துறைக்கு சொந்தமாக இருந்தது. இப்பகுதியில் சாலை அமைப்பதற்காக, வனத்துறைக்கு சொந்தமான இடத்தை நெடுஞ்சாலைத்துறை எடுத்துக் கொண்டு, இதற்கு பதிலாக வீரபாண்டியில் 4 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு வழங்கியுள்ளனர். இந்நிலையில், 2.8 கிமீ தூரத்தில் 20 மீட்டர் அகலத்தில் வனத்துறை இடத்தில் சாலை அமைக்க ெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 2.8 கி.மீது தூரத்திற்கு 7 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்பட்டது. பாக்கியுள்ள இடத்தை அளந்து நெடுஞ்சாலைத்துறை எல்லைக்கல் ஊன்றியுள்ளது. இந்நிலையில், 7 மீட்டர் அகல சாலையை 10.5 மீட்டராக அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து கடந்த 2019 ஜனவரியில் நடந்த சாலைப் பாதுகாப்புக்குழுக் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, தேனி பைபாஸ் சாலையை 10.5 மீட்டராக அகலப்படுத்த  ரூ.3.5 கோடி நிதியை தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அன்னஞ்சியில் இருந்து தேனி புதிய பஸ்நிலையம் செல்லக்கூடிய பைபாஸ் சாலையில் 1.6 கிமீ தூரத்திற்கு 10.5 மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை ஒப்படைத்த 2.8 கிமீ தூரத்தில் சாலையை விரிவு படுத்த வனத்துறை தடுத்தது. இதனால், சாலை அகலப்படுத்தும் பணி நடக்காமல், சிதிலமடைந்துள்ளது. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு, முடங்கிப்போயுள்ள சாலைப்பணியினை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இப்பகுதியில் சாலை அமைப்பதற்காக, வனத்துறைக்கு சொந்தமான இடத்தை நெடுஞ்சாலைத்துறை எடுத்துக் கொண்டு, இதற்கு பதிலாக வீரபாண்டியில் 4 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு வழங்கியுள்ளனர்.

Tags : administration ,road ,Theni Bypass ,District , Road expansion work, Theni Bypass road blocked, District administration, demands action
× RELATED 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான கலை...