×

இந்தியாவின் சிறந்த ரயில் நிலையங்கள்!

நன்றி குங்குமம் முத்தாரம்

ரயிலில் பயணம் செய்வது அழகு.  அது சென்று நிற்கும் சில ரயில் நிலையங்களோ மிக அழகு. அவற்றின் வெளிப்பக்கக் கவர்ச்சியைக் கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது. சென்னையில் சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்கள் பக்கம் செல்லும்போது அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு அலுக்காது. இந்தச்சூழலில் இந்தியாவின் சிறந்த அழகு ரயில் நிலையங்கள் என சில கண்டறியப்பட்டுள்ளன! மொத்தம் 18 பிளாட்பாரங்கள். இதன் பழைய பெயர் விக்டோரியா டெர்மினஸ். இந்த ரயில் நிலையத்தை யுனெஸ்கோ, பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. கோதிக் ஸ்டைலை நினைவூட்டும் இந்தக் கட்டிடம் அந்த கலையையே புதுப்பிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அசப்பில் ஏதோ அரசு ஹெட்குவார்ட்டர்ஸ் ஆபீஸ் போலும் என எண்ணத்தோன்றும். இவை அனைத்துமே வெளியிலிருந்து பார்க்கத்தான். உள்ளே நுழைந்தால் எங்கு பார்த்தாலும் ஜனத்திரள் ஓட்டமும், நடையுமாய்  என ஸ்டேஷனே பரபரப்பாக இருக்கும்.

கட்டாக் ரயில் நிலையம்

மொத்தமே 5 பிளாட்பாரங்கள்தான். ஆனால், இதன் வெளியமைப்பு பார்ப்போரை ஏதோ கோட்டை போலிருக்கே என எண்ண வைக்கும். உண்மையில் ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள பாராபதி (Barabati) கோட்டையைப் போல் இந்த ஸ்டேஷனுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. மிக அதிக அளவில் புக்கிங் நடக்கும் 100 இந்திய ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. பாராபதி... கிழக்கு கங்கா ராஜ பரம்பரையினரால் எழுப்பப்பட்ட கோட்டை. இன்று சீரழிந்த நிலையில் உள்ளது.

சார்பாக் ரயில்வே ஸ்டேஷன்

இந்த ஸ்டேஷனின் அழகே சுற்றி தோட்டங் களைக் கொண்டுள்ளது தான். லக்னோவின் சார்பாக் ரயில்வே ஸ்டேஷனை, இந்தியாவின் மிக அழகான ரயில் நிலையம் என வர்ணிப்பர். காரணம், இதன் விஸ்தாரமான மற்றும் எடுப்பான தோற்றம்! அசப்பில் ஒரு பிரமாண்ட அரண்மனை போல காட்சியளிக்கிறது. இது அவதி, ராஜ்புத் மற்றும் முகலாய கட்டிடக் கலைகளின் பாணியில் கட்டப்பட்டது. கூடுதல் சிறப்பு என்னவென்றால், வானத்திலிருந்து நோக்கினால், ஸ்டேஷன், ஒரு செஸ்போர்டு மாதிரி காட்சியளிக்கும். அது மட்டுமல்ல. ஸ்டேஷனின் தூண்கள், தாழிகள், செஸ்போர்டில் உள்ள காயின்கள்போல் காட்சியளிக்கும். 16 பிளாட்பாரங்கள் கொண்டது.

ஹவுரா ஜங்ஷன்

கூக்ளி (கங்கை) நதியின் கரையில் இருப்பது இதன் முதல் சிறப்பு. இரண்டாவது, 23 பிளாட்பாரங்களைக் கொண்டது. இதன் சிவப்பு வண்ண கட்டிடத்தை முதலில் ஜார்ஜ் டேர்ன்புல் என்பவர் வடிவமைத்தார். பிறகு 1905-ல் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் ஹால்சி ரிக்கார்டோ மறு வடிவமைத்து, இதன் கம்பீரத்தைக் கூட்டினார்.

விஜயவாடா ரயில் நிலையம்

10 பிளாட்பாரங்கள். நாட்டின் மிக பிசியான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. இரவு 10 மணி முதல் அடுத்த நாள் காலை வரை ரயில்கள் வந்து போய்க்கொண்டேயிருக்கும். இதன் ரீகல் வெள்ளை வண்ண வெளித்தோற்றம் பார்ப்பவரை மயக்கும். 1888-ம் ஆண்டு மராட்டா ரயில்வேயின் மெயின் ரூட்டை, மற்ற ரூட்களுடன் இணைக்கவென்றே கட்டப்பட்ட ரயில் நிலையம். இந்தியாவின் பிரபல ரயில்கள் அனைத்தும் வந்து செல்கின்றன.

Tags : Best Railway Stations ,India ,India Best Railway Stations , Best Railway Stations in India
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...