×

ரூ.18 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

செங்கல்பட்டு: பொத்தேரி அருகே  செந்தமிழ்நகர் பகுதியில் டெல்லியில் பணியாற்றி வரும் கணேஷ் என்பவருக்கு சொந்தமான மூன்றடுக்கு மாடி வீடு உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த   கணேஷ் மாணிக்கம்  என்பவர் பூண்டு வியாபாரம் செய்வதாக கூறி வீட்டை வாடகைக்கு தங்கினார். மேலும்,  வீட்டின் கீழ்தளத்தை  குடோனாக பயன்படுத்தி வந்தார். இந்நிலையில்,  அந்த குடோனில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின்பேரில்  குற்ற நுண்ணரிவு பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, 4 டன் எடையிலான குட்காவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ₹18 லட்சம் என கூறப்படுகிறது.

மெக்கானிக்குக்கு சரமாரி வெட்டு
புழல், ஜூன் 10: செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு திருவிக தெருவை சேர்ந்தவர் அப்பு (எ) சிலம்பரசன் (27). லாரி மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து, அப்புவை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். வலியால் அலறித்துடித்த அப்புவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு  செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அப்புவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.



Tags : kutka , Rs 18 lakh worth ,kutka seized
× RELATED ஓசூர் அருகே வாகன சோதனையில் ரூ.11கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்