×

கொரோனாவை கட்டுப்படுத்த 50 மாவட்டங்களுக்கு மத்திய உயர்மட்ட குழு: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஆய்வு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் சுமார் 50 மாவட்டங்கள் மற்றும் பேரூராட்சிகளுக்கு மத்திய உயர்மட்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் தலா 7 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்குழுவினர், குறைவான பரிசோதனை, அதிக பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 2 மாதத்தில் தீவிரமடைந்த பரவல், நோயாளிகளுக்கு படுக்கை பற்றாக்குறை, அதிகரிக்கும் இரட்டிப்பு விகிதம், வைரஸ் தொற்று எண்ணிக்கை திடீரென அதிகரிப்பது ஆகிய சவால்களை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகளை வழங்குகிறது.

Tags : Central High Commission ,Districts ,Control Corona ,Tamil Nadu Central High Commission ,Tamil Nadu , Central High Commission, 50 Districts, Control Corona, Study, 7 Districts of Tamil Nadu
× RELATED அமோனியம் நைட்ரேட்டை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்ற திட்டம்