×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.35,952க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரம் காரணமாக, இந்த மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த நான்கு நாட்களாகத் தங்கம் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.சென்னையில் இன்று (ஜூன் 10) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,494 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,482 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 35,832 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 120 ரூபாய் உயர்ந்து 35,952 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53.20 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 53,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,488 ஆகவும், டெல்லியில் ரூ.4,516 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,571 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,442 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,378 ஆகவும்,கேரளாவில் ரூ.4,292 ஆகவும் இருக்கிறது.

Tags : Sovereigns ,Chennai , Gold, Price, Shaving, Silver, Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...