×

கொரோனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்னை : ராயபுரம் உட்பட 6 மண்டலங்களில் பகீரங்க வேட்டை; ஒரே நாளில் 10 பேர் பலியான சோகம்

சென்னை:  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை  4,192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 9ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது. சென்னையில் நேற்று புதிதாக 1,243 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 24,545 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,738 பேர் குணமடைந்துள்ள நிலையில் 243 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.19% பேர் ஆண்கள், 39.80% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 9ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

ராயபுரம் – 4,192
கோடம்பாக்கம் – 2,656
திரு.வி.க நகரில் – 2,351
அண்ணா நகர் – 2,178
தேனாம்பேட்டை – 2,846
தண்டையார் பேட்டை – 3,192
வளசரவாக்கம் – 1,136,
அடையாறு – 1,411,
திருவொற்றியூர் – 934,
மாதவரம் – 682
பெருங்குடி – 450,
சோளிங்கநல்லூர் – 435,
ஆலந்தூர் – 483,
அம்பத்தூர் – 848,
மணலி – 362 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 389 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Madras ,Corona ,zones ,tragedy ,Raipur 10 ,Madonna ,Royapuram , Corona, Madras, 6 zones, hunting
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...