×

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ் கான் நியமனம்

கராச்சி: பாகிஸ்தான் அணி அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்து சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடர் ஜூலை 30ம் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளன. இந்த தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் (42 வயது) நியமிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. முன்னாள் நம்பர் 1 பேட்ஸ்மேனான யூனிஸ் கான், 118 டெஸ்ட் போட்டிகளில் 10,099 ரன் எடுத்துள்ளார் (அதிகம் 313, சராசரி 52.05, சதம் 34, அரை சதம் 33). மேலும் 265 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 7249 ரன் (அதிகம் 144, சராசரி 31.24, சதம் 7, அரை சதம் 48) விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் லெக்-ஸ்பின்னர் முஷ்டாக் அகமது, அணியின் ஆலோசகராக நியமிக்கப்படுவதாகவும் பிசிபி தலைமை செயலதிகாரி வாசிம் கான் தெரிவித்துள்ளார். முஷ்டாக் பாகிஸ்தான் அணிக்காக 52 டெஸ்ட் போட்டியில் 185 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். யூனிஸ் கான் மற்றும் முஷ்டாக் நியமனங்களை தலைமை பயிற்சியாளரும், தேர்வுக் குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக் வரவேற்றுள்ளார்.


Tags : Younis Khan ,Pakistan ,batting coach , Younis Khan ,appointed, Pakistan batting coach
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...