×

டிஜிபி அலுவலகத்தில் 2 டிஎஸ்பிக்களுக்கு கொரோனா: மாநகரில் பாதிப்பு எண்ணிக்கை 511 ஆக உயர்வு

சென்னை: காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் 2 டிஎஸ்பிக்கள், கோட்டூர்புரம் உதவி கமிஷனர் உட்பட 20 போலீசாருக்கு ேநற்று நோய் தொற்று உறுதியானது. சென்னை மாநகரில் கொரோனா தடுப்பு பணி மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசார் இடையே நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், தமிழகம் காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றி வரும் 2 டிஎஸ்பிக்கள் மற்றும் மாநகர காவல் துறையில் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் உட்பட 20 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

அதைதொடர்ந்து கொரோனா பாதித்த 20 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐஐடி மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்துள்ளனர். அந்த வகையில் டிஜிபி அலுவலகத்தில் நேற்று வரை ஒரு எஸ்பி, 5 டிஎஸ்பிக்கள் உட்பட 30 பேரும், மாநகர காவல் துறையில் நேற்று வரை 511 போலீசார் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : city , Corona
× RELATED ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி...