×

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் வசதி பெற தொலைபேசி எண்: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் வசதியை பெற சிறப்பு தொடர்பு எண்ணை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள கூடுதல் பளுவை திறம்பட சமாளித்து 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செம்மைப்படுத்த சென்னை மாநகராட்சி பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்புகளை கையாளும் விதமாக கொரோனா தொற்றுக்கென பிரத்யேகமாக தனி கட்டுப்பாட்டு அறையை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்படி சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 044 - 40067108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக அமையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona Victims ,Corona ,Minister of Health , Corona, Ambulance, Telephone Number, Minister of Health, Information
× RELATED சிங்கப்பூரில் வேகமெடுக்கும் கொரோனா...