×

கொரோனா வார்டில் இருந்த இதய அறுவை சிகிச்சை டாக்டர் பலி: பெசன்ட் நகரில் உடல் தகனம்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தை  சேர்ந்தவர் வினோத் (33), டாக்டரான இவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். இவர், கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. டாக்டர் வினோத்திற்கு சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு பிரச்னை இருந்துள்ளது.  அதே மருத்துவமனையிலேயே கடந்த 30ம் தேதி கொரோனா கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா  உறுதியானது. அதைதொடர்ந்து,  அவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் அவருக்கு மூச்சு திணறல் காரணமாக நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், டாக்டர் உடலை சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகிருஷ்ணனிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம், டாக்டர் வினோத் பெற்றோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு பட்டினப்பாக்கத்தில் டாக்டர் வினோத் உடலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கொரோனா வார்டில் பணியாற்றி வந்த 33 வயது இளம் டாக்டர் ஒருவர் கொரோனா ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் டாக்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Coroner ,Ward Cardiac Surgery ,Bali: Body Burial ,Besant City ,Kills ,Doctor ,Corona , Corona, Doctor, Kills, Body Burial
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...