×

மூச்சு திணறலால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை; திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்...!

சென்னை: திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க.வின் சென்னை மேற்கு மண்டல செயலாளராகவும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி  தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2-ம் தேதியன்று மூச்சு திணறல்  சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த 8-ம் தேதி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும், இன்று காலையில் இருந்து ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளது. ஜெ.அன்பழகனின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன. ஜெ.அன்பழகனின் ரத்த அழுத்தத்தை சீராக  வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதய செயல்பாடுகள் வெகுவாக குறைந்துள்ளன என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : hospital ,MLA ,Thiruvallikeni ,intensive care , Intensive care in hospital with shortness of breath; Thiruvallikeni MLA J Health
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...