×

ஆந்திர அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு; சமூக இடைவெளியா..? அப்படீனா?.. எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்

அமராவதி: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஓர் ஆண்டு ஆட்சி நிறைவை, அக்கட்சி அமைச்சர் தனிமனித இடைவெளியின்றி கொண்டாடியுள்ளார். ஆந்திர மாநிலத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில் போட்டியிட்டு 151 இடங்களை கைப்பற்றியது. இதனால் அக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அத்துடன் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் அக்கட்சி முதலாம் ஆண்டு ஆட்சியை நிறைவுசெய்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முட்டசம்செட்டி நிவாச ராவ், ஓராண்டு ஆட்சியை கொண்டாடும் வகையில் நேற்று கேக் வெட்டி கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் விசாகப்பட்டினம் எம்பி சத்யநாராயணா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தொண்டர்கள், ஆதரவாளர்கள் உட்பட அனைவரும் ஒன்றாக கூடி கொரோனா பரவல் அச்சமின்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நெருக்கடியான சூழல் உருவாகியது. அங்கிருந்த அதிகாரிகளும் சமூக இடைவெளி குறித்து வலியுறுத்தவும் இல்லை. இந்த கொண்டாட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

Tags : Minister ,Andhra Pradesh ,opposition parties ,cheerleader , Andhra minister, cheerleader, social gap, opposition parties
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்