×

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விரிசல்: பொதுமக்கள் அச்சம்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் நிலவிவந்த கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. தற்போது விதிமுறைகளை மீறி பலர் வாகனங்களை இயக்கி வருவதால் மேம்பாலத்தில் அவ்வப்போது சில விபத்துக்களும் நடந்து வருகின்றன. இதேபோல் பைக் ரேஸ் நடத்துதல், சொகுசு கார்களை நிறுத்திவிட்டு மது அருந்துதல் ஆகிய சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. மேம்பாலத்தின் அகலமான பகுதிகளில், பகல் வேளைகளில் பலரும் சொகுசு, கனரக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இந்த நிலையில் மேம்பால பக்கச்சுவர் பல இடங்களில் விரிசல் கண்டுள்ளது.

இதில் இருந்து அவ்வப்போது பெயர்ந்து விழும் சிமென்ட் துண்டுகள், கீழே சர்வீஸ் சாலையில் செல்பவர்கள் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது. இதை பெயின்ட் அடித்து மறைத்து வந்தனர். தற்போது விரிசல் அதிகரித்துள்ளதால் அந்த இடங்களில் தெர்மோகோல் துண்டுகளை வைத்து அடைத்துள்ளனர். இதேபோல் சாலையும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரிசல்களை சரிசெய்து, உறுதித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



Tags : Marthandam ,The Bridge , Marthandam, cracks in the bridge
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...