×

ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் எப்போது பக்தர்களுக்கு அனுமதி?... தேவஸ்தானம் விளக்கம்

ஆந்திரா: ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்திருந்த நிலையில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பக்தர்கள் அனுமதிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஸ்ரீகாளகஸ்தி கோவில் 12-ம் தேதி முதல் பக்தர்களை அனுமதிப்பதற்கான நாளை முதல் சோதனை முறையில் கோவிலில் பணிபுரியும் ஊழியர்களை வைத்து தரிசனத்திற்கு அனுமதிக்க இருந்த நிலையில் கோவிலில் பணி புரியக்கூடிய 71 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 பேரின் மாதிரி முடிவுகள் வந்த நிலையில் அர்ச்சகர் ரமேஷ் என்பவர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் அனுமதிக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக கோவில் நிர்வாக செயல் அலுவலர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.


Tags : devasthanam ,devotee , Srikalakasti temple, devotee, sanction, devasthanam
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...