×

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட வாகன ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் வரை அவகாசம்; மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மோட்டார் வாகனங்களுக்கான ஆவணங்களை செப்டம்பர் வரை பயன்படுத்தலாம் என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு சாலை போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட அனைத்து வாகன ஆவணங்களையும் புதுப்பிக்கும் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறைவாகவுள்ள இடங்களில் கடந்த 14-ம் தேதி கிழமை முதல் பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து, 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கால கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் செயல்படவில்லை. மேலும் பொது போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக தனி நபர்கள், கல்வி நிறுவனங்களின் வாகனப்போக்குவரத்தும் நடைபெறவில்லை. இதனிடையே தனி நபர்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பது மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கான ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணத்தை கட்டுவது போன்றவற்றில் சிக்கல் ஏற்பட்டது.

இதனையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மோட்டார் வாகன அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.  மேலும் அனைத்து மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வரும் ஜூன் மாதம் 30 ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில்,  ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


Tags : Central ,government , Driving License, Vehicle Registration, Leave Time, Central Government
× RELATED மப்பேடு அருகே ரூ.1200 கோடி மதிப்பீட்டில்...