×

இந்தியாவை கொள்ளையடித்த ராபர்ட் கிளைவுக்கு இங்கிலாந்தில் சிலை: உடனடியாக சிலையை அகற்றகோரி எம்.பி.க்கள் உள்பட 1700 பேர் கையெழுத்து!

ஷ்ரூஸ்பரி: இந்திய காலனி ஆதிக்கத்தின் விதையாக கருதப்படும் ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவின் சிலையை இங்கிலாந்தில் உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இங்கிலாந்தின் மேற்கில் அமைந்துள்ள ஷ்ரூஸ்பரி என்ற இடத்தில் ராப்ரட்டின் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை அகற்றக்கோரி எம்.பி.க்கள் உள்பட 1,700க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு அரசுக்கு மனு அளித்துள்ளனர். இந்த சிலை கிளைவ் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பனி நிர்மாணிக்கப்பட்ட நேரத்தில் வங்காளத்தில் ஆளநராக இருந்தவர் ராபர்ட் கிளைவ். இவர் வங்காளத்தில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வங்களை இங்கிலாந்துக்கு கடத்திச் சென்றார் என்பது புகார் ஆகும்.

மேற்கத்திய நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இருந்த எட்வர்ட் கோல்ஸ்டன் என்பவரின் சிலையை போராட்டக்காரர்கள் அடித்து உதைத்தனர். இவர் 17ம் நூற்றாண்டில் அடிமைகளை விற்றுவந்த வியாபாரி ஆவார். எட்வர்ட் கோல்ஸ்டன் போல ராப்ர்ட் கிளைவும் அப்பாவி இந்தியர்களை மிரட்டி ஒடுக்கி கொள்ளையடித்தார் என்பது அவர் மீது போராட்டக்காரர்கள் மற்றும் எம்பிக்கள் வைக்கும் குற்றச்சாட்டு ஆகும். இந்தியாவில் சுமார் 30 ஆண்டுகாலம் வாழ்ந்த ராப்ர்ட் கிளைவ், 1774ல் நடந்த பளாசிபோர் மற்றும் அலாகாபாத் உடன்படிக்கையில் முக்கிய சூத்திரதாரி ஆவார்.

Tags : UK ,Robert Clive ,Robert Branch ,India ,protesters ,MPs , India, England, Robert Clive, Statue, protest
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...