மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! தமிழக அரசின் முடிவை, மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன் : வைகோ அறிக்கை

ன்னை : ஜூன் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்த 10 ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்துச் செய்யப்பட்டு, அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்வு பெற்றதாக, தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார். தமிழக அரசின் இந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இதற்காக எச்சரிக்கை மணி அடித்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நன்றி செலுத்துவதாகவும் இது மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>