×

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு

புதுச்சேரி: தெலுங்கானா, தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்று வல்லுநர்கள், நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, பெற்றோர்களின் கோரிக்கையையும், நோய் தொற்றின் தற்போதைய நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு, மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க, வருகின்ற 15-ம் தேதி முதல் நடைபெறவிருந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளும், 11-ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே, இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். இதன்படி, அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் புதுச்சேரியில் வகுப்புகள் நடைபெறுவதால், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைபோல், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். 12-ம் வகுப்பு தேர்வைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக் கேற்ப 12-ம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Tags : election ,Kamalakannan ,elections ,Puducherry ,Tamil Nadu , 10th general election canceled in Puducherry following Tamil Nadu elections State Education Minister Kamalakannan announces
× RELATED வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க...