×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கொரோனாவால் ரூ.1 கோடி மதிப்பிலான 200 டன் வெல்லம் விற்பனையாகாமல் தேக்கம்: 5 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

வேலூர்: வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் ₹1 கோடி மதிப்பிலான 200 டன் வெல்லம் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. 5 ஆயிரம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் 69 லட்சத்து 35 ஆயிரத்து 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 52 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 269 பேர் பலியாகியுள்ளனர். இப்படி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கினால் நாடுமுழுவதும் பல்வேறு தொழில்கள் அடியோடு முடங்கியுள்ளது. பல கோடி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்திலும் கடுமையாக தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களும் கொரோனாவுக்கு தப்பவில்ைல. சாலையோரக்கடைகள் தொடங்கி, நவீன ஏசி ஷோரூம்கள் வரையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் உள்ள வெல்லமண்டிகளில் வெல்லம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், பரதராமி ஆகிய இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காட்டிலும் வெல்லமண்டிகள் இயங்கி வருகிறது.
இந்த மண்டிகளுக்கு வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் வெல்லம் ேலாடு வேலூர் மண்டிக்கு கொண்டுவரப்படும். பின்னர் இங்கிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும்.சராசரியாக வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்களில் 100 டன் வெல்லம் வரை கொண்டு வரப்பட்டு விற்பனையாகி வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பால் வெல்லம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 டன் வரையே வெல்லம் வருகிறது. அவையும் விற்பனையாவதில்லை.

இதனால் வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் சுமார் 200 டன் அளவுள்ள வெல்லம் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் சுமார் ₹1 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளதால், சரக்கு வாகனங்களுக்கு முன்பு 1 லோடுக்கு கட்டணம் ₹2,500 ஆக இருந்தது. தற்போது ₹5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் விற்பனையாகும் ஒரு சில வெல்லமூட்டைகளுக்கும் அதிகளவில் லாரி வாடகை செலுத்த வேண்டியுள்ளது. வெல்லம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெல்லம் மண்டிகளை நம்பியுள்ள 5 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனாவால் கரும்பு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெல்லம் வரத்தும் பாதியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வெல்லமண்டி தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Tirupathur ,Vellore ,Ranipettai ,Corona , 200,000 tonnes , jaggery ,Rs 1 crore , Corona, Vellore, Tirupathur, Ranipettai
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்