×

போடி அருகே ஊரடங்கால் நிறுத்தப்பட்ட இணைப்புச் சாலை பணி தொடங்குவது எப்போ?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

போடி: போடி அருகே, கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட கண்மாய்க் கரை இணைப்புச் சாலை பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி அருகே, மீனாட்சிபுரத்தில் மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கரை வழியாக விசுவாசபுரம், அம்மாபட்டிக்கு செல்லலாம். கரைப்பகுதியில் இருந்து அம்மாபட்டிக்கு செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் உள்ளது. இந்த சாலை வழியாக மாட்டு வண்டி, டூவீலர், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாகலை குண்டும், குழியுமாக பெயர்ந்ததால் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜல்லிக்கற்களை குவித்து சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதனிடையே கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பணி மீண்டும் தொடங்கப்படாமல் உள்ளது. ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி பல பணிகள் தொடங்கிய நிலையில், மீனாட்சியம்மன் கண்மாயில் உள்ள அம்மாபட்டி இணைப்புச் சாலை பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bodhi , curtain road work,Bodhi begin,Farmers' expectation
× RELATED 1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது;...