×

ராஜபாளையத்தில் போக்குவரத்து நெருக்கடி அரசு அறிவித்த புறவழிச்சாலை எப்போது அமையும்?: வாகன ஓட்டிகள் கேள்வி

ராஜபாளையம்:  ராஜபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் அரசு அறிவித்தபடி புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என  வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். ராஜபாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான டூவீலர், நான்கு சக்கர வாகனங்கள் ராஜபாளையம் வந்து செல்கின்றன. இவை தவிர கனரக வாகனங்களும் ராஜபாளையம் வழியாக செல்கின்றன. இந்நிலையில் சாலையோரங்களில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி, அலுவலக பணிக்கு செல்வோர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. கடும் நெரிசலால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, ராஜபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புறவழிச்சாலை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பல ஆண்டுகளாகியும் பணி துவக்கப்படவில்லை. ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உடனடியாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : traffic crisis ,Rajapalayam ,Motorists ,government , traffic crisis , Rajapalayam, announced,government , Motorists question
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி