×

மதுரை, நாமக்கல், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் 265.46 கோடி செலவில் பாலங்கள், சாலைகள் திறப்பு?

சென்னை: மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம் வாரணாசி - கன்னியாகுமரி சாலையில் காளவாசல் சந்திப்பில் 54 கோடியே 7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தட சாலை மேம்பாலத்தை சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும், மதுரை மாவட்டம், செல்லூரில், சாலை மேம்பாலத்தின் வலதுபுறம் சேவை சாலை, மதுரை - அழகர் கோவில் - மேலூர் சாலை, மூன்றுமாவடி - ஐயர்பங்களா - பி & டி நகர் - ஆலங்குளம் - செல்லூர் குலமங்கலம் சாலை, ஆனந்தம் நகர் - ஆனையூர் சாலை கூடல்நகர் வானொலி நிலையம் வரையிலான இணைப்பு சாலை, பேருந்து நிறுத்துமிடம் அமைத்தல், சிறுபாலம் திரும்ப கட்டுதல் மற்றும் அகலப்படுத்துதல், தடுப்பு சுவர் கட்டுதல், வடிகால் அமைக்கும் பணிகள்; நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - பள்ளிப்பாளையம் - ஜேடர்பாளையம் - பாண்டமங்கலம் - வேலூர் சாலையில் பள்ளிப்பாளையம் ரயில்வே நிலையத்திற்கு அருகில் ஒரு வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை - நாட்ராம் பள்ளி சாலையில் மேம்பாலம்,அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் - தஞ்சாவூர் சாலையில் மேம்பாலம், புதுக்கோட்டை மாவட்டம், சித்திராம்பூரில் பாம்பாற்றின் குறுக்கே பாலம்.

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி - கூகுடி சாலையில் விருசுழி ஆற்றின் குறுக்கே கண்ணங்குடியில் பாலம், திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டையில் 42 கோடியே 79 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வழி பரிமாற்ற மேம்பாலம், சென்னை, கிண்டியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 17 கோடியே 66 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மைய கட்டிடம் என மொத்தம் 265 கோடியே 46 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், சாலை பணிகள், சுரங்கப்பாதை மற்றும் பயிற்சி மைய கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

Tags : Roads ,Opening ,Bridges ,Madurai ,Namakkal ,Chennai ,Tiruvallur District ,district , Chennai, Tiruvallur, Bridges, Roads, Opening?
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...