×

காஷ்மீரில் ராணுவத்தால் தீவிரவாதிகள் வேட்டை: 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள பிஞ்ஜோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று ராணுவ வீரர்கள், சிஆர்பிஎப் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்கு வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரேபான் பகுதியில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட 24 மணி நேரத்துக்குள்ளாக மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 50 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : militants ,Kashmir , Four militants, shot dead , militants, Kashmir
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி