×

கடன் வட்டியை குறைத்தது எஸ்பிஐ

புதுடெல்லி:  பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) எம்சிஎல்ஆர் மற்றும் சந்தை அடிப்படையிலான கடன் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதன்படி, ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 7.25 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வட்டி தொடர்ந்து 3வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல், ரெப்போ வட்டி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வெளிச்சந்தையை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம் 0.4 சதவீதம் குறைத்துள்ளது. இதன்படி வெளிச்சந்தை வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும், ரெப்போ அடிப்படையிலான கடன் வட்டி 6.25 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிப்படை வட்டியை 8.15 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக குறைத்துள்ளது. இவை வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

Tags : SBI , SBI cuts ,interest, rates
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...