×

கொரோனா வார்ட்டில் தமிழிசை சவுந்தரராஜன்.: நோயாளிகளை தமிழிசை நேரில் சந்திக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரல்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள் மருத்துவர்கள் மற்றும்  செவிலியர்களை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் ஐதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தகுந்த பாதுகாப்பு உடைகளுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்த தெலுங்கானா மாநில ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் மருத்துவமனை நிர்வாகிகளிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களிடமும் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் அவர்களது பணிகளை வெகுவாக பாராட்டினார்.

கொரோனா பாதித்த மருத்துவர்களை துணிச்சலுடன் நேரில் சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு தெரிவித்து வரும் இணைய விரும்பிகள், இது தொடர்பான காட்சிகளை சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்.


Tags : Soundararajan ,Tamilisai cavuntirarajan ,Corona ,Corona Ward ,Tamilisai , Corona, ward, Tamilisai,straight, meets ,
× RELATED விழுப்புரம் அரசு மருத்துவமனையில்...