×

பாலைவன வெட்டுக் கிளிகள் தமிழகத்திற்கு வராது.: வெட்டுக் கிளிகள் ஊடுருவினால் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் பாலைவன வெட்டுக் கிளிகள் தமிழகத்திற்கு வராது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கும்பகோணம் உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

பின்ன செய்தியாளர்களை சந்தித்த அவர்; பாலைவன வெட்டுக் கிளிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு இல்லை என்றார். பாலைவன வெட்டுக் கிளிகள் குறித்து ஜோத்பூரில் உள்ள பூச்சியியல் துறை மத்திய அரசிடம் தொடர்ந்து பேசி வருவதாக தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.  வெட்டுக் கிளிகள் தமிழகத்திற்குள் ஊடுருவினால் அதனை கட்டுப்படுத்த தீயணைப்பு துறை தயாராக உள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Desert grasshoppers ,Tamil Nadu , Desert ,grasshoppers, Tamil Nadu
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...