×

கொரோனா செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்: கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கோரிக்கை

சென்னை: கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவை சேர்ந்த திருமாவளவன், கொளத்தூர் மணி,  ஜவாஹிருல்லா, வேல்முருகன், ராமகிருட்டினன், தெஹ்லான் பாகவி, திருமுருகன் காந்தி, சரீப், இனிகோ இருதயராஜ், வன்னிஅரசு, நெல்லை முபாரக், அப்துல் சமது, பெரியார் சரவணன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: கொரோனாவை தேசிய பேரிடராக அறிவித்துள்ள நிலையில், அந்த பேரிடரின் அனைத்து வகையான பாதிப்புகளிடமிருந்தும் நாட்டு மக்களை பாதுகாப்பது அனைத்து மக்கள் நலன் அரசின் கடமையாகும். ஆகவே,  கொரோனா சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும்.

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பையும் அரசு பெற்று மக்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில், கட்டணங்களை நிர்ணயித்து, பேரிடர் சேவையை வர்த்தக சேவையாக மாற்றுவது ஏற்புடையதல்ல. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான முதல் பருவக் கட்டணங்களை ரத்து செய்து அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government ,Tamil Nadu , Light rain ,possible , Tamil Nadu
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...