×

ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகரில் 337 பேருக்கு தொற்று

சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, மண்ணடி, பாரிமுனை, கொத்தவால்சாவடி, ஏழுகிணறு, கொண்டித்தோப்பு, மிண்ட் தெரு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 127 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், வெங்கடேஷ்வரா காலனி, முத்தமிழ் நகர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, பாரதி நகர், அரி நாராயணபுரம், மேயர் பாசுதேவ் தெரு, ஆரணி ரங்கன்தெரு, புது வண்ணாரப்பேட்டை சேணியம்மன் கோயில் தெரு, செரியன் நகர், காசிமேடு, தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 103 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு பகுதியில் 38 வயது காவலர், வஉசி  தெருவில் 4 பேர், அம்மன் கோயில் தெருவில் 4 பேர், நட்டால் கார்டன் தெருவில் 2 பேர், என்எஸ்கே தெருவில் பள்ளி மாணவி, பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 26வது தெரு, வெங்கடேசன் தெரு, அன்னை அஞ்சுகம் நகர், பெரியார் நகர் 2வது தெரு ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், அயனாவரம் பங்காரு தெருவில் 2 பேர்,  மயிலப்பா தெருவில் ஒருவர், திருவிக நகர் ராமமூர்த்தி காலனியில் தனியார் மருத்துவர், தங்கவேலு தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், தீட்டித்தோட்டம் 1வது தெருவில் 3 பேர், பொன்னுசாமி நகரில் 2 பேர், ஓட்டேரி நியூ பேரன்ஸ் ரோட்டில் ஒரே வீட்டில் 7 பேர், டோபிகானா பகுதியில் துப்புரவு பணியாளர், ஈடன் கார்டன் பகுதியில் சிவில் இன்ஜினியர் ஒருவர், தர்கா தெருவில் நிறைமாத கர்ப்பிணி, பேசின் பிரிட்ஜ் பகுதியில் தம்பதி, ஓட்டேரி நார்த் டவுன் பகுதியில் 5 பேர், கொளத்தூர் பகுதியில் 5 பேர், புளியந்தோப்பு, தட்டாங்குளம்,  டிம்லர்ஸ் ரோடு ஆகிய பகுதிகளில் 5 பேர் என 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Tags : Ravipuram ,Thiruvika ,Thindyarpet ,Corona ,Royapuram , Royapuram, Thindyarpet, Corona
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...