×

பிரசவ வார்டு முன்பு மரங்களில் வளையல்களை கட்டி வினோத வழிபாடு

சின்னாளபட்டி: சின்னாளபட்டி அரசு சமுதாய நல மையத்தில் பிரசவ வார்டு முன்புள்ள மரங்களில்  பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள் வளையல்களை கட்டி விநோத வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள அரசு சமுதாய நல மையத்தில் 30 படுக்கைகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளது. இந்த அரங்கம் தற்போது கர்ப்பிணிகளின் பிரசவம் பார்க்கும் வார்டாக இயங்கி வருகிறது. சின்னாளபட்டியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், கர்ப்பிணிகளை இங்கு பிரசவத்திற்கு அழைத்து வருகின்றனர்.

பிரசவத்துக்கு முன்பு, சுகப்பிரசவம் நடைபெற வேண்டி வார்டு முன்புள்ள வேம்பு, புங்கை மரங்களில் வளையல்களை கட்டி விநோத வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். பிரசவம் முடிந்து, தாய் மற்றும் சேயை வீட்டிற்கு அழைத்து செல்லும்போது வளையல்கள் கட்டி வழிபட்ட மரங்களுக்கு நன்றி தெரிவித்து வணங்கி செல்கின்றனர். இதனால் மருத்துவமனை முன்பு உள்ள மரங்களின் கிளைகளில் வளையல்கள் கொத்து, கொத்தாக தொங்குகின்றன.

Tags : childbirth ward , Childbirth ward, bangle, bizarre worship
× RELATED வெள்ளத்தில் தத்தளிக்கும் கர்நாடகம்...!!...