×

கடலூர் அருகே பரபரப்பு: ஊரடங்கு உத்தரவை மீறி கோயிலுக்குள் சென்ற அமைச்சர்

கடலூர்: கடலூர் அருகே ஊரடங்கை மீறி அமைச்சர் ஒருவர் கோயிலுக்குள் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் வழிபாட்டு தலங்கள் மீது தொடர்ந்து ஊரடங்கு நீடிப்பதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம் அழகர் கோயிலுக்கு அமைச்சர் சம்பத் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த பலர் நேற்று திருப்பணி தொடர்பாக பார்வையிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கடலூர் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரனிடம் கேட்டபோது, தென்னம்பாக்கம் அழகர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், கோயில் நிர்வாக அலுவலர் கண்காணிப்பில் இயங்கி வருகிறது. தற்போது திருப்பணியும் மேற்கொள்ளப்படுகிறது. ஊரடங்கால் கோயிலுக்குள் யாருக்கும் அனுமதி கிடையாது. போகக்கூடாது என்பது நிலை. இதுவரை வழிபாட்டு தலங்களுக்கு தளர்வு ஏதும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் அறிவிக்கப்படவில்லை.

அமைச்சர் சென்றிருந்தாலும் அதற்கு அறநிலையத்துறை தான் பதிலளிக்க வேண்டும், ஊரடங்கு தொடர்ந்து வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் நீடிப்பதால் பக்தர்களும் மற்றும் அனைத்து பொதுமக்களும் அதனை கடைபிடிக்க வேண்டும், என்றார்.

Tags : Minister ,Cuddalore , Minister who visited the Cuddalore, curfew and temple
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...