×

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி நாளை முக்கிய ஆலோசனை: அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாகவும், பள்ளிகள் திறப்பது குறித்தும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை  உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த, வழக்கை  விசாரித்த சென்னை  நீதிமன்றம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு..? என தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக நாளை மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்கிறார். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்தினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Tags : CM Palanisamy ,Class General Elections ,schools ,elections , 10th Class General Elections, Opening of Schools, Chief Palanisamy, Consulting
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...