×

ஊரடங்கால் உணவின்றி திருச்சியில் பிச்சை எடுத்த ஹரியானா வாலிபரை மீட்ட உதவி கமிஷனர்: சிறப்பு ரயிலில் அனுப்பப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருச்சி: ஊரடங்கால் திருச்சியில் உணவு கிடைக்காமல் பிச்சை எடுத்த ஹரியானா வாலிபரை உதவி கமிஷனர் மீட்டு சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை மீட்ட அம்மாநில போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஹரியானா மாநிலம் பகதுர்ஷா மாவட்டத்தை சேர்ந்த சுபோஷ் சர்மா என்பவரது மகன் நித்கேஷ்(28). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாயமானார். இதுகுறித்து புகாரின்பேரில் ஹரியானா போலீசார் மாயமானவர் படம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து தேடுதல் நடத்த உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே ஊரடங்கால் தேடுதல் படலம் தடைப்பட்டது.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் புலம் பெயர்ந்தவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், கன்டோன்மென்ட் உதவி கமிஷனர் மணிகண்டன் கடந்த வாரம் ரோந்து பணியில் இருந்தபோது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் அருகே வட மாநில வாலிபர் உணவிற்காக பிச்சை எடுத்து கொண்டிருந்தார். இதனை பார்த்த உதவி கமிஷனர் மணிகண்டன் வாலிபரை மீட்டு கிராப்பட்டியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் அனுமதித்தார். விசாரணையில் ஹரியானா போலீசாரால் தேடப்பட்ட நித்கேஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஹரியானா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து வாலிபர் நித்கேஷ் கடந்த 5ம் தேதி திருச்சி திருச்சியிலிருந்து சென்ற சிறப்பு ரயில் மூலம் ஹரியானா அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்‌ஷன் உடன் இருந்தார். இதில் நேற்று வாலிபரை மீட்ட பெற்றோர் மகனை பார்த்து கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து ஹரியானா போலீசார் வாலிபரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Tags : Assistant commissioner ,Haryana ,Trichy , Curfew, Trichy, begging the young Haryana
× RELATED ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத...